தமிழகத்தில் எல்.ஜி. பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது குறித்து சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஊடகங்களில் எல்.ஜி.பி.டி.கியூ.ஐ.ஏ பிளஸ் சமுதாயத்தில் அளித்த சொற்களஞ்சியத்தை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சுருக்குவது குறித்து சொற்பியல் மற்றும் அகராதித்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் […]
