4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள அண்ணாநகரில் பாண்டியன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அல்லிநகரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே பாண்டியன் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]
