வருவாய் ஆய்வாளர் என நடித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஏமாற்றிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வேலம்பாளையம் பகுதியில் மகரஜோதி(29) என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் என கூறி போலியாக நடித்து அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முனியப்பன் உள்பட 7 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் […]
