கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு மத்திய அரசு போதுமான உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அதாவது ஆளும் பாஜக அரசு குஜராத் மாடல் என கூறிக் கொள்கிறது. ஆனால் குஜராத்தில் […]
