ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள ஏரித்தெருவில் ரேஷன்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் […]
