அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்து பார்த்த வருவாய் ஆய்வாளர் லட்சுமிநாராயணன், இதனை பற்றி விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.அந்த தகவல் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன்,2 ஏட்டுகள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் […]
