திருவலம் அருகில் 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து செல்வன், காவல்துறையினர் சேர்க்காடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படி ஒரு நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில் வசித்துவந்த பழனி(42) என்பதும், அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் […]
