ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் போதையில் லாரி ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் விக்டோரியா மாகாணத்தில் முகிந்தர் சிங் என்ற 48 வயது நபர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி அன்று விக்டோரியா மாகாணத்தின் தலைநகரான மெல்போர்னில் இருக்கும் சாலையில் லாரியில் சென்றபோது போதை மற்றும் தூக்கக்கலக்கத்தில் இருந்துள்ளார். இதனால், லாரியை அவசர வழி பாதையில் திருப்பி வேகமாக இயக்கி சென்றுள்ளார். […]
