தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு கோவில்பத்து கீழத்தெருவில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பலவேசத்திற்கு கோவில்பத்து கீழத்தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. கடந்த 4 ஆம் தேதி பலவேசம் தனது குடும்பத்தினருடன் ஒரு வீட்டிற்கு தூங்க சென்றுயுள்ளார். இதனையடுத்து காலையில் குடும்பத்தினர் மற்றோரு வீட்டிற்கு சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் […]
