பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமாக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறைவுசெய்துள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு தண்டனை காலம் மீதம் உள்ளது. இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. […]
