தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற இருந்த மக்களவை தேர்தல் 6 கட்டம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டி விட்ட சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றார். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த சந்திரசேகராவ் நேற்று சென்னையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்தார். […]
