வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித் தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (10), சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7) ஆகிய மூவரும் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான இன்று மூவரும் […]
