Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. வீட்டிற்கு பின்புறம் நடந்த சம்பவம்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழரசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் வைத்து கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து தமிழரசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இரு வீட்டு பிரச்சனை….. பெண்ணின் வாயில் விஷம்…. குடும்பமே கைது…

இளம்பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டவாலத்தை சேர்ந்தவர் ராமன் இவர் மகள்  ஜோதி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ரவி-சரஸ்வதி தம்பதியினர் மற்றும் அவரது தம்பி  குமாரகிருஷ்ணன். ராமன் விவசாய நிலமும் ரவியின் விவசாய நிலமும் அருகருகே இருந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியில் வந்த சமயம் ரவி மற்றும் குடும்பத்தினர்கள் ஜோதியிடம் வந்து தகராறில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கவுண்டமணி ,வடிவேலுக்கு டஃப் கொடுத்த மூவர் … திரைப்பட பாணியில் பிரபல ஹோட்டல் விற்க முயற்சி …!

வடபழனி அம்பிகா எம்பையர் ஹோட்டலை கேரள நிறுவனத்திடம் போலியாக விற்க முயன்ற மூவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சென்னை வடபழனி 100அடி சாலையில் ‘அம்பிகா எம்பையர்’ என்ற பெயரில் தனியார் நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக மோசடி நபர்கள் 3 பேர், கேரளாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த பிரபல நிறுவனத்தின் மேலாளர் குலாம் நபி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: தவறான தகவல் பரப்பிய மூவர் கைது!

 கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பல்வேறு பகுதிகள், கொரோனா வைரஸ் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

182 பெண்களின் அந்தரங்க வீடியோ …. மிரட்டி பணம் பறித்த 2 தொழிலதிபர்கள் …. விசாரணையில் பகீர் பின்னணி …!!

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த 3 பேர்  கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காளத்தில் பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகாமற்றும்  பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகிய இருவரும் நண்பகள் ஆவர். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதலில்  ஒரு பெண்ணுடன் நட்புடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் உத்தமர்கள்…. இரவில் கொள்ளையர்கள்…

சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்துக்கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரவாயில் அருகே இரவில் இரு சக்கர வாகனத்தில்  சென்று கொண்டு இருந்த சுரேஷ் என்பவரை வழிமறித்து மூன்று பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,500 ரூபாயை பறித்துள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கி பிடித்து சரமாரியாகத் தாக்கி பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது..!!

அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ […]

Categories
திருச்சி புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிறந்து 21 நாள்களே ஆன குழந்தை… “ரூ 1,15,000 க்கு விற்பனை “… 3 பேர் அதிரடியாக கைது..!!

மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000  ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் […]

Categories
உலக செய்திகள்

“செல்ஃபிக்கு போஸ் கொடுக்க  மறுப்பு” விமான பணிப்பெண்ணுக்கு உதை…. 3 பேருக்கு சிறை தண்டனை..!!

செல்ஃபிக்கு போஸ் கொடுக்க  மறுத்ததால் விமான நிலைய பணிப்பெண்ணை குடிபோதையில் தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லெ தி ஜியாங் (Le Thi Giang) என்பவர் வியட்னாமின் தன் ஹோவா (Tahn hoa) -வில் உள்ள தோ சுவான் (Tho Xuan) என்ற விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உங்களுடன் (லெ தி ஜியாங்) செல்பி எடுக்க வேண்டும் என்று 3 பயணிகள்  கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணும் சரி என சம்மதித்து அவர்களுடன் செல்ஃபி […]

Categories

Tech |