ஹாங்காங்கில் 38 மாடிகள் உடைய மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஹாங்காங் நகரில் இருக்கும் ஹாஸ்வே பே என்னும் பகுதியில் 38 மாடிகள் உடைய மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. அங்கு, உணவகங்கள், உலக வர்த்தக மையத்தின் கிளை போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டிடத்தின் மின் இணைப்பு அறையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதன்பின்பு, தீ வேகமாக கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. […]
