புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
