சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் அரசு மீட்டு வர மறுத்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் : சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் சுமார் 361 பேரை காவு கொண்டுள்ளது. அங்குள்ள உகான் மாகாணத்தில்தான் இந்த நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் பலர் மருத்துவ படிப்பு படிக்கிறார்கள். கொரோனா தாக்குதல் காரணமாக அந்த உகான் நகரம் ஒரு தீவுபோல் ஆகி விட்டது. அங்கு வெளியாட்கள் […]
