சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் வகையில் 360 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக […]
