கவுண்டயமஹாநதி வெள்ளத்தில் 36 மணி நேரமாக சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பல போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த கூட நகரம், பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி எல்லம்மாள். சேதுக்கரை பொன்னம்பட்டி- இந்திராநகர் இடையே கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே மேடான பகுதியில் இவர் கொட்டில் அமைத்து, அதில் 30க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை மாலை எல்லம்மாள் பன்றிகளுக்கு உணவு வைத்து விட்டு அங்கேயே இருந்துள்ளார். […]
