இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். சர்தார் வல்லபாய் படேலின் 357 அடி உயர சிலையானது குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 20,000 சதுர அடியில் எழுப்பப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் சிலை இந்தியாவின் ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லார்சன் அண்ட் டூப்ரா நிறுவனத்திடம் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கும் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. […]
