போட்ஸ்வானாவில் சென்ற இரண்டு மாதங்களாக 350க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் இருக்கிறது. அந்த நாட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேலான யானைகள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் இருக்கின்ற காடுகளில் சென்ற மே மாதம் முதல் ஜூலை வரையில் 350க்கும் மேலான யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். […]
