மெக்கானிக் கடைக்காரரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வன அலுவலக சாலையில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மெக்கானிக்கான இவர் அப்பகுதியில் பஸ், லாரி ஆகியவை பழுது நீக்கும் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கருநாக்கமுத்தம் பெட்டியில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் […]
