தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இந்த படம் நடிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை நயன்தாராவின் மார்க்கெட் குறையவே இல்லை. பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு திருமணத்திற்கு முன்பு வரை 4 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த நிலையில், தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். […]
