அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த 35 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மத்துருட்டு, வேப்பிலைகுட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனையடுத்து சட்ட விரோதமாக செய்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த […]
