விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலம்பட்டி விலக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சாத்தூர் சேர்ந்த மாரிச்செல்வம்(22) மற்றும் பெரியகொல்லபட்டி சேர்ந்த மாரீஸ்வரன்(51) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த 20,000 ரூபாயையும், 344 […]
