இந்திய பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம் விலை கொடுத்ததாவது வாங்குவோம் என நேபாள நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நேபாளம் தனது புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவைக் குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபானி,லிம்பியாதுரா, லிபுலேக் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலான லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலையை இந்தியா திறந்து 10 நாட்களுக்குப் பின்னரே நேபாள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த […]
