ஜி.வி.பிரகாஷுடன் மற்றும் சாண்டி படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பேச்சுலர்”. செல்வகுமார் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அதே நாளில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்த ”3.33” திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் மேனன், […]
