வெறிநாய்கள் கடித்ததால் 33 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வலங்காவயல் கிராமத்தில் விவசாயியான சோலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 38 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தோட்டத்தில் இருக்கும் கொட்டகையில் ஆடுகளை அடைத்துவிட்டு சோலை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 33 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு சோலை அதிர்ச்சி அடைந்தார். மேலும் 5 ஆடுகள் உயிருக்கு […]
