அசானி புயல் இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 33 மாவட்டங்களின் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், […]
