திட்டம்போட்டு விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 32 லட்சம் மற்றும் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆர்.கே.எம் காம்ப்ளக்ஸில் தரைத்தளம் மேல்தளம் என மொத்தம் 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் தரைதளத்தில் விசைத்தறி உரிமையாளரான விமல் என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று விமல் தனது உறவினர் ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக குடும்பத்தினரோடு துக்கம் விசாரிக்க […]
