ஏமன் ராணுவ தளத்தில் அமைந்திருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் அபியன் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 நபர்கள் பலத்த காயமடைந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், எதனால் வெடிவிபத்து ஏற்பட்டது? […]
