இலங்கை தமிழர்களுக்கு சுமார் 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 408 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1060 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் வழங்கியுள்ளார். அப்போது 19 லட்சத்து 88 ஆயிரம் ருபாய் மதிப்பிலான பாத்திரங்கள், துணிகள் மற்றும் 47,430 ரூபாய் மதிப்பிலான விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பு […]
