ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்தில் இதுவரையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. ஈராக்கில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம்காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் இதுவரையில் 300 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் அரசு, […]
