3000 ஆண்டு கால பழமையான பாறை ஓவியங்களை கண்டுபிடித்ததால் பல்வேறு வரலாற்று சின்னங்களை மீட்டெடுக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வகுரணி மொட்டமலை பகுதியில் புலிப்புடவு குகை அமைந்துள்ளது. அங்கிருந்த பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள் 3000 ஆண்டு கால பழமையானது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அபூர்வமாக கிடைக்கும் பெண் ஓவியங்கள், சிவப்பு நிறத்தில் புலி உருவம், புள்ளிகளால் ஆன மனித ஓவியம் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் […]
