பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6,000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் 36,000ரூபாய் பெற முடியும். அந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும். […]
