சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். திருக்கோயிலை சுற்றி […]
