உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து 30 ஆயிரம் டன் தானியங்களை ஏற்றிக் கொண்டு மேலும் இரண்டு சரக்கு கப்பல்கள் வெளியேறியுள்ளதாக துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து, உலக நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல மில்லியன் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து உணவு தானியங்களை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். […]
