நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் வருகின்ற 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது. இங்கு நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. […]
