சென்னையில் 60லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நந்தினி , அருள்ராஜ் தம்பதியினரின் 3 வயது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தம்பதியினர் பணிக்கு சென்று வருவதால் சிறுமியை பராமரிப்பதற்கு பணிப்பெண்ணாக அம்பிகாவை நியமித்துள்ளனர் . இந்நிலையில் பணிப்பெண் அம்பிகாவிடம் சிறுமியை விட்டுவிட்டு நந்தினி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் […]
