உடற்பயிற்சியாளரை 3 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் அருண் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருண் பாபு உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்த போது 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். […]
