தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னஅய்யம்பள்ளி குளம் பகுதியில் 24 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது பால சமுத்திரத்தை சேர்ந்த ஓட்டுநரான சரத்குமார், கூலி தொழிலாளர்களான மதன், கோட்டை முத்து ஆகியோர் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
