உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் லியான்னிங் மாகாணத்தில் ஷென்யான் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்த தெருவில் உள்ள மற்ற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. மேலும் கரும் புகையானது விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறியுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்குமாக பதறியடித்துக் கொண்டு […]
