சட்டத்திற்கு விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிய மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனிப்படை குற்றத் தடுப்புப் பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அக்கரைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அல்லபடுவதாக போலீஸ்காரர் ராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர் இதுகுறித்து விசாரிப்பதற்காக தன்னுடைய காரில் அக்கரைப்பற்று சென்றுள்ளார். அந்த சமயத்தில் பெருமாள், ஜான்கென்னடி, தங்கபாண்டி, கட்டகருப்பு, […]
