பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை காவல்துறையினருக்கு திருமலையான்பற்றி பகுதியில் சிலர் பணம் வைத்து விளையாடிக் கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்து உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அய்யப்பன், அழகர்சாமி, அப்புகுட்டி என்ற மூன்று வாலிபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
