அண்ணனையும் தம்பியையும் தாக்கிய குற்றத்திற்காக 3 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் தியாகராஜன், அருள்செல்வன் என்ற அண்ணன் தம்பி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருட்செல்வன் தனது தந்தைக்கு கடனை திருப்பி தர வேண்டிய குருமூர்த்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அந்த சமயத்தில் குருமூர்த்திக்கும் அருள் செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த குருமூர்த்தியின் உறவினர்களான சின்னதுரை, ரவி, செல்வகுமார் ஆகிய 3 பேரும் அருகில் இருந்த இரும்பு […]
