மருத்துவ படிப்பு படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று போலி டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பேரையூர் வருவாய்த்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் ராமர் என்பவரது வீட்டில் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப்பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை […]
