3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று காலை மக்களவையிலும், […]
