மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர், தபாஸ்கோ என்னும் மாகாணத்தில் கௌதமாலா நாட்டின் எல்லையின் அருகில் வழக்கம் போல் சோதனை பணியை மேற்கொண்டு இருந்தது. அதில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் இருந்தார்கள். ஹெலிகாப்டர் சென்ட்லா நகருக்கு அருகில் சென்று சமயத்தில் திடீரென்று விமானிகள் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு […]
