அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நடராஜன் இன்று டீ-20யில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கன்பராவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 150 ரன்களை அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவின் 150 ரன்களில் கட்டுப்படுத்த சாஹல், நடராஜன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம். […]
