கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு கார் மற்றும் பைக் சேதமடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் முளகுமூட்டையில் வசித்து வருபவர் 39 வயதுடைய வினோ ரெஞ்சின். இவர் கடந்த 26ம் தேதி மதியம் தனது நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை வினோ ரெஞ்சின் ஓட்டிச் சென்றார். அப்போது நாகர்கோவில் பாலத்தை கடந்து வெட்டூர்ணிமடம் வரும்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி […]
