கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் ராஜ்குமார்- சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷ்மிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சங்கீதா தனது மகள், மாமனார், மாமியாருடன் அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையிடம் ஒரு செல்போனை கொடுத்து தனியாக உட்கார வைத்துவிட்டு 3 பேரும் வயலில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்போனில் விளையாடி கொண்டே நடந்து […]
